×

செந்நாய்கள் தாக்கி ஆடுகள் பலி

பந்தலூர் :  பந்தலூர் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை பகுதியில் வசித்து வருபவர் விவசாயி  தியாகராஜா. ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அருகே உள்ள தேயிலைத்தோட்டத்திற்கு மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு ஆடுகள் திரும்பி வராததால் நேற்று ஆடுகளை தேடி அப்பகுதியில் இருக்கும் தேயிலைத்தோட்டத்திற்கு சென்றார்.அப்போது அங்கு இரண்டு ஆடுகளும் மர்ம விலங்குகள் தாக்கி தின்று உடல் பாகங்கள் சிதறி கிடந்துள்ளதை பார்த்தவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சேரம்பாடி வனத்துறையினர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செந்நாய்கள் தாக்கி ஆடுகள் பலியாகி இருப்பதாக வனத்துறையினர்  தெரிவித்தனர். வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தினார்….

The post செந்நாய்கள் தாக்கி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Thiagaraja ,Serambadi Nayakkancholai ,Dinakaran ,
× RELATED பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பாதிப்பு