×

நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி தொழிலாளி பலி

 

விக்கிரவாண்டி, மே 20: விக்கிரவாண்டி அருகே சித்தணி பேருந்து நிறுத்தம் பகுதியில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலியானார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் சித்தணி பேருந்து நிறுத்தம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வேகமாக சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரைச் சேர்ந்த ேகாவிந்தசாமி மகன் அந்தோணிராஜ் (26) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் பயணம் செய்த ஆரோக்கியதாஸ் மகன் வில்லியம் (30), பீட்டர் மகன் ரிமேஜியஸ் (25) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த அந்தோணிராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த அந்தோணிராஜ் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி என தெரியவந்துள்ளது. இதுபற்றி விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சித்தணி பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Siddhani ,Jeep ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...