×

கயத்தாறு அருகே வீடு புகுந்து ₹2லட்சம் திருடிய வாலிபர் கைது

கயத்தாறு,மே 20: கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட உசிலங்குளம் வேத கோயில் தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் உபேந்திர குமார் (40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், கடந்த 15ம் தேதி தனது வீட்டில் உள்ள பீரோவில் ₹2 லட்சத்து 20 ஆயிரத்தை வைத்து பூட்டி விட்டு சாவியை அதன் மேலேயே வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 2 லட்சத்தை திருடி சென்றதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உபேந்திராகுமார் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். விசாரணையில் உசிலங்குளம் மேலத்தெருவை சேர்ந்த பழனி முருகன் மகன் லட்சுமணன் (25) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே கயத்தாறு காவல் நிலைய போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கயத்தாறு அருகே வீடு புகுந்து ₹2லட்சம் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Gayathur ,Gayatharu ,Upendra Kumar ,Uchimagali ,Usilangulam Veda Koil Street ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை