- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தின மலர்
தஞ்சாவூர், மே 19: தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர்களின் உறவினர்களாகன கரந்தை பகுதியை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் வராண்டாயை ஒட்டியுள்ள பகுதியில் காத்திருந்தனர். அப்போது திடீரென மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். பழமையான கட்டடம் என்பதால் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
