×

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் உண்டியலில் ரூ.34 லட்சம் காணிக்கை

திருவிடைமருதூர், மே 20: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் நடந்த உண்டியல் திறப்பில் பக்தர்கள் ரூ.34 லட்சம் காணிக்கை செலுத்தியிருந்தனர். தமிழக திருப்பதி என போற்றப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மார்ச் 15ம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் அறநிலையத் துறை மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன், ஒப்பிலியப்பன் கோயில் உதவி ஆணையர் சாந்தா ஆகியோரது முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.

அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி, தமிழ்நாடு திருக்கோவில் ஆன்மீக சேவைக் குழுவின் 40 தன்னார்வலர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 13 பொது உண்டியலில் ரூ.29 லட்சத்து 38 ஆயிரத்து 814, திருப்பணி உண்டியல்களில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 60 என மொத்தம் ரூ 34 லட்சம் இருந்தது. மேலும் தங்க நகைகள் 254 கிராம், வெள்ளி நகை 653 கிராம், வெளிநாட்டு நாணயங்கள் 5 ஆயிரத்து 500, வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 115 எண்ணிக்கையில் இருந்ததாக கோயில் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.

The post திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் உண்டியலில் ரூ.34 லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirunageswaram Oppiliyappan temple ,Thiruvidaimarudur ,Thirunageswaram Oppiliyappan temple ,Thirunageswaram Oppiliappan temple ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை