×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 92.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

புதுக்கோட்டை, மே20: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 331 பள்ளிகளில் இருந்து, 12,041 மாணவர்களும், 12,223 மாணவிகளும் என மொத்தம் 24,264 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,768 மாணவர்களும், 11,630 மாணவிகளும் என மொத்தம் 22,398 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.31 சதவிகிதமாகும். மாநிலப் பட்டியலில் கடந்த 2022ம் ஆண்டில் 30வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், 2023ம் ஆண்டில் 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 86 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 26 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

அமரசிம்மேந்திரபுரம், அரையப்பட்டி, பூவைமாநகர், தாந்தாணி, ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம், எருக்கலாக்கோட்டை, எஸ். குளவாய்ப்பட்டி, பள்ளத்திவிடுதி, பெரியலூர் கிழக்கு, நற்பவளசெங்கமாரி, இடையாத்திமங்கலம், ஆயிங்குடி தெற்கு, அரசர்குளம் கிழக்கு, சூரன்விடுதி, தாளனூர், பொன்பேத்தி, பொன்னாகரம், நீர்ப்பழனி, கிளிக்குடி, மதியநல்லூர், மேலப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, பாக்குடி, குருங்களூர், சம்மட்டிவிடுதி. மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 173 பள்ளிகளில் இருந்து, 8,430 மாணவர்களும், 9,887 மாணவிகளும் என மொத்தம் 18,317 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 6,825 மாணவர்களும், 9,109 ம ாணவிகளும் என மொத்தம் 15,934 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86.99 சதவிகிதமாகும். மாநிலப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 2022ம் ஆண்டில் 27வது இடத்தில் இருந்து நிகழாண்டு 2023ஆம் ஆண்டில் 30வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 20 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஒரு அரசு பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 92.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Tamil Nadu ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்