×

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஊராட்சி செயலர்கள் பணிக்கு திரும்பினர்

திருமயம்,மே20: சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஊராட்சி செயலர்கள் பணிக்கு திரும்பினர். தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் பணி புரியும் ஊராட்சி செயலர்கள் காலிப்பணியிடம், சம்பளம், பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 4 நாட்களாக ஊராட்சி செயலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளிடம் தொடர் விடுமுறை அளித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். இதன் மூலம் படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வர வாய்ப்புள்ளது.

மேலும் ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட பிறகு ஊராட்சியில் நடைபெறும் பிற பணிகளுக்கான நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி விதிகள் குறித்து ஆணையை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஊராட்சி செயலர்களின் கோரிக்கைகள் பரிசளிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஊராட்சி செயலர்கள் அரிமளம் ஒன்றிய அலுவலகத்தில் தொடர் விடுப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு திரும்பினர். இதனால் கடந்த நான்கு நாட்களாக பாதிக்கப்பட்ட ஊராட்சி செயலர்கள் பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

The post சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஊராட்சி செயலர்கள் பணிக்கு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Chennai ,Thirumayam ,Tamil Nadu ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி