×

பெரம்பலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்காக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு

பெரம்பலூர்,மே20: பெரம்பலூரில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதலுக்காக ஆன் லைன் முறையில் கலந்தாய்வு நடந்தது. இதில் 4 அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிமாறுதலுக்கான பணி நியமனஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 2022-2023ம் ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பணிநிறைவு கலந்தாய்வு தமிழக அளவில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று(19ம்தேதி) வருவாய் மாவட்டத்திற்குள் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் நடைபெற்றது.இந்த ஆன்லைன் கலந்தாய்வை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். கலந்தாய்வில் பெர ம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்து கொண்ட 10 பேர்களில் பெரம்பலூர் தாலுகா செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை டெய்சி ராணி, பெரம்பலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகவும், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் செங் குணம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும், குன்னம்தாலுகா, முருகன்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குருசாமி,பெரம்பலூர் தாலுகா, கல்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், ஆலத்தூர் தாலுகா,கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை வஹிதாபானு பெரம்பலூர் தாலுகா லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பணி மாறுதல் பெற்றனர்.மீதமுள்ள 6 பேர்களுக்கு விருப்பமான இடம் தேர்வாகவில்லை. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மணிவண்ணன் பணிமாறுதல் பெற்ற 4 அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, பணியேற்க உள்ள பள்ளிகளில் சிறப்பாகப்பணிபுரிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

The post பெரம்பலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்காக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Govt High School ,Perambalur ,Government High School ,Dinakaran ,
× RELATED வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1.40 லட்சத்தில் டெஸ்க், பெஞ்சுகள்