×

தேர்வில் வெற்றி, மாணவர்கள் மகிழ்ச்சி அக்னி வெயில் 100டிகிரி மேல் அதிகரிப்பு கால்நடைகளை தாக்கும் வெப்ப அயர்ச்சி நோய்

க.பரமத்தி, மே.20: க.பரமத்தி சுற்று பகுதியில் அக்னி வெயில் 100டிகிரி மேல் அதிகரித்துள்ள நிலையில், கால்நடைகளை வெப்ப அயர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வெப்ப அயர்ச்சி என்பது கால்நடைகளின் உடல் வெப்ப நிலையை விட, அதன் சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பதால் உடல் வெப்பத்தினை வெளியேற்றும் அளவு குறைந்து, உடல் பாதிக்கப்படுவதாகும். கோடைக் காலங்களில் சுற்றுச்சூழல் வெப்பநிலை உடல் வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதால், வெப்ப அயர்ச்சி கால்நடைகளை கடுமையாக பாதிக்கிறது.

அனைத்து வகையான கால்நடைகளும் கோடைக்காலங்களில் குறைவான அளவு உணவு உட்கொள்கின்றன. இனப்பெருக்க திறன் குறைந்து காணப்படுகின்றன. கோடை வெயில் காலங்களில் கறவை பசுக்களின் பால் உற்பத்தித் திறன் குறைந்துவிடுகிறது. ஆட்டினங்களின் உடல் வளர்ச்சி குறைந்து, எதிர்பார்க்கும் எடை கிடைப்பதில்லை. முட்டைக்கோழிகளில் முட்டை உற்பத்தி குறைந்தும், வெளி ஓடு இல்லா முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

இறைச்சிக்கான கோழிகளில், எடை குறைந்து காணப்படுகிறது. கோடைக் காலங்களில் கால்நடைகளுக்கு சமச்சீர் உணவு அளித்தல் மிகவும் இன்றியமையாதது. உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் கால்நடைகளின் தாகம் தணிக்க, அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் வெப்பம், கால்நடைகளின் உடலை அதிகம் வெப்பம் அடையாமல் தடுக்க, நிழலான, காற்றோட்டமுள்ள இருப்பிடத்தைக் அமைத்து தர வேண்டும். இருப்பிடத்தின் மேற்கூரையில் அதிகவெப்பம் உள்ள பகல் நேரங்களில் குளிர்ந்தநீரைத் தெளிக்க வேண்டும். கால்நடைகளின் சமச்சீர் உணவில் வைட்டமின்களும், உப்புக் கலவைகளும் அளிப்பதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்க இயலும். எனவே, கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான உணவு தண்ணீர், இருப்பிடம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினால், வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம், என கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

The post தேர்வில் வெற்றி, மாணவர்கள் மகிழ்ச்சி அக்னி வெயில் 100டிகிரி மேல் அதிகரிப்பு கால்நடைகளை தாக்கும் வெப்ப அயர்ச்சி நோய் appeared first on Dinakaran.

Tags : Agni Veil ,K. Paramathi ,K. ,
× RELATED க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்