×

கறவை மாடுகள் பராமரிப்பு பயிற்சி

 

தர்மபுரி, மே 20: தர்மபுரி குண்டலப்பட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கண்ணதாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக, கறவைமாடுகளில் பால் உற்பத்தி குறைவு, சினைபிடித்தலில் சிரமம், அதிக அளவில் மூச்சிரைப்பு, வெப்ப அயற்சி உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளுக்கு ஆளாகின்றன. கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள், தங்களது கறவை மாடுகளை கோடைகாலத்தில் முறையாக மேலாண்மை செய்து,

கறவைமாடுகளின் நலனையும், உற்பத்தியையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், தர்மபுரி குண்டலப்பட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 24ம் தேதி, கோடை காலத்தில் கறவைமாடுகளின் நலனையும் உற்பத்தியையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு நாள், இலவச வளாகப் பயிற்சியை நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் கோடை காலங்களில் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய கொட்டகை பராமரிப்பு, தீவனம் மற்றும் நீர் அளித்தல், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து விளக்கப்படங்கள் மற்றும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியர்கள், பயிற்சி அளிக்க உள்ளனர். எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கறவை மாடுகள் பராமரிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Centre ,Veterinary Medical Sciences University of Darmapuri Kundalapatti ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 5...