×

மலேசிய முருகனுக்கு பழநி வஸ்திரம் பயணம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்து மலேசிய நாட்டின் பத்து மலை முருகன் கோயிலுக்கு வஸ்திரங்கள், பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு சார்பில் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயில்களுக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்படுமென சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் சார்பில் மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலுக்கு பஞ்சாமிர்தம், ராக்கால சந்தனம், கவுபீன தீர்த்தம், முருகன் மற்றும் வள்ளி- தெய்வானைக்கு பட்டாடைகள், மலை வாழை, கனி வகைகள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் இப்பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோயிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பழநி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ராஜசேகர், கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உள்ளிபட பலர் கலந்து கொண்டனர்.

The post மலேசிய முருகனுக்கு பழநி வஸ்திரம் பயணம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Vastram ,Malaysia Murugan ,Thandayuthapani Swami Temple ,Batu Malai Murugan Temple ,Malaysia ,Dinakaran ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது