×

கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு வந்தவர் ஓட்டல் அறையில் தற்கொலை: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபரின் தந்தை ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். கேரள மாநிலத்தில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 2 வயது பெண்குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷாருக் செய்பியுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லியை சேர்ந்த முகம்மது ஷாபி (46), என்பவரின் மகன் முகமது மோனிசை விசாரணைக்காக என்ஐஏ கொச்சிக்கு வரவழைத்தது.

இதைத் தொடர்ந்து முகம்மது ஷாபியும், மகன் முகம்மது மோனிசும் நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்தனர். இவர்கள் கொச்சியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அன்று இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முகம்மது ஷாபி ஓட்டல் கழிப்பறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான போட்டோக்களும், விவரங்களும் பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து கேரள தீவிரவாத தடுப்புப் படை ஐஜி விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு வந்தவர் ஓட்டல் அறையில் தற்கொலை: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : NIA ,Kozhikode ,Kerala ,Thiruvananthapuram ,Walibur ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை