×

நாட்டிலேயே முதன்முறையாக கழுத்தில் தழும்பு இல்லாமல் ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக கழுத்தில் தழும்புகள் இல்லாத வகையில் ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் வெங்கட் கார்த்திகேயன் கூறியதாவது: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் இருந்த 8 செ.மீ அளவுள்ள மிகப் பெரிய கட்டியை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவரது இணை உமிழ்நீர் சுரப்பி எனப்படும் சப்மாண்டிபுலார் சுரப்பியில் சுமார் 8 செமீ அளவுக்கு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டிலேயே முதன்முறையாக கழுத்தில் அறுவைச்சிகிச்சையின் தழும்புக்கள் ஏதும் ஏற்படமால் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் சப்மாண்டிபுலர் சுரப்பியில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. காது மூக்குத் தொண்டைப் பிரிவில் ரோபாட்டிக் முறையிலான தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை என்பது தனிச் சிறப்பு வாய்ந்த துணைப் பிரிவாகும். இது தொண்டையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகளை அகற்றுவதற்கான டார்ஸ் வகை அறுவைச்சிகிச்சையாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், கழுத்தில் உள்ள கட்டிகளை எவ்வித தழும்புகளும் ஏற்படாமல் அகற்றும் அறுவை சிகிச்சை முறையான ரெட்ரோஆரிகுலர் ஹேர்லைன் இன்ஷிஷன் முறை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக கழுத்தில் வெளியே தெரியும் பகுதியில் எந்த வித வடுக்களோ, தழும்புகளோ ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாட்டிலேயே முதன்முறையாக கழுத்தில் தழும்பு இல்லாமல் ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Nation ,Apollo Hospitals ,Chennai ,Apollo Hospital ,Dinakaran ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...