×

இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ரைபாகினா

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (21 வயது, போலந்து) மோதிய ரைபாகினா (23 வயது, 6வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் இருவரும் விடாப்பிடியாகப் போராட, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறிய ரைபாகினா 7-6 (7-3) என வென்று பதிலடி கொடுத்தார்.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இரு வீராங்கனைகளும் 2-2 என சமநிலை வகித்தபோது, ஸ்வியாடெக் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரைபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் லாத்வியாவின் யுலேனா ஆஸ்தபென்கோவுடன் (25 வயது, 8வது ரேங்க்) மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் பவுலா படோசா (25 வயது, 35வது ரேங்க்) 2-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது. அரையிறுதியில் ரைபாகினா – ஆஸ்தபென்கோ, குதெர்மதோவா – கலினினா மோதுகின்றனர்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Italy Open tennis ,Raibagina ,Rome ,Elena Raibagina ,Women's Singles Division ,Italy Open ,Dinakaran ,
× RELATED இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும்...