×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைவாசிகளில் 200 பேர் தேர்ச்சி: 422 மதிப்பெண்கள் பெற்று புழல் சிறை கைதி சாதனை

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைவாகளில் 200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் புழல் மத்திய சிறை கைதி சுரேஷ் என்பவர் 422 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள புழல், வேலூர், பாளையங்கோட்டை, கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 9 பெண்கள் உட்பட 203 சிறை வாசிகள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருநத்து. இந்நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் 9 பெண் சிறைவாசிகள் உட்பட 200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்ச்சி விகிதத்தில் 98.52 சதவீதமாகும்.

குறிப்பாக, புழல் மத்திய சிறையில் உள்ள சுரேஷ் என்ற சிறைவாசி 500 மதிப்பெண்களுக்கு 422 பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை வேலூர் பெண்கள் சிறையில் உள்ள ராதா என்ற சிறைவாசி 500க்கும் 414 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், பாளையங்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் 413 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறை கைதிகளை சிறைத்துறை உயர் அதிகாரிகள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

* பாளை, மதுரை சிறை கைதிகள் ‘ஆல்பாஸ்’
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை பாளை மத்திய சிறைக்கைதிகள் 14 பேர் எழுதினர். நேற்று வெளியான முடிவின்படி தேர்வு எழுதிய 14 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் உட்பட 24 கைதிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* 1026 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,823 அரசுப்பள்ளிகளில் 1,026 பள்ளிகள் 100 % தேர்ச்சியடைந்துள்ளன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகளை பொறுத்தவரை 87.45% தேர்ச்சி பெற்றுள்ளன.

* தமிழில் 100/100 யாரும் இல்லை
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் எந்த மாணவ – மாணவியரும் 100க்கு 100 மதிப்பெண்களை எடுக்கவில்லை.

* 89.77 சதவீத மாற்றுதிறனாளிகள் தேர்ச்சி
பொதுத்தேர்வை எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 10,808 பேர்களில் 9,703 (89.77%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விவரம்
பாடம் தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் தேர்ச்சி வீதம்
மொழிப்பாடம் 914320 873611 95.55%
ஆங்கிலம் 914320 904578 98.93%
கணக்கு 914320 873533 95.54%
அறிவியல் 914320 875418 95.75%
சமூக அறிவியல் 914320 876190 95.83%

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைவாசிகளில் 200 பேர் தேர்ச்சி: 422 மதிப்பெண்கள் பெற்று புழல் சிறை கைதி சாதனை appeared first on Dinakaran.

Tags : Krat ,Chennai ,Kamudra ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...