×

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் சொத்து ரூ.2000 கோடி சரிவு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் ரூ.2000 கோடி சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய வம்வாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக உள்ளார். அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் தலைவர் நாராயண்மூர்த்தியின் மகள். இவர்களது சொத்து மதிப்பு அதிகம். கடந்த ஒருவருடத்திற்கு முன்பு இந்த தம்பதியின் சொத்து மதிப்பு ரூ.7000 கோடியாக இருந்தது. ஆனால் ஒரே வருடத்தில் ரூ.2000 கோடி சரிந்து இப்போது அவர்களது சொத்து ரூ.5 ஆயிரம் கோடியாக உள்ளது.

இத்தனைக்கும் அவர்கள் பணக்காரர்கள் பட்டியலில் 275வது இடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு 222வது இடத்தில் இருந்தனர். ஐடி துறையில் இந்தியாவில் ஏற்பட்ட சரிவால் இன்போசிஸ் பங்கு மதிப்பு சரிந்ததால் இந்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் ரிஷிசுனக் இங்கிலாந்து பிரதமராக ஆண்டுக்கு ரூ.1.69 கோடி சம்பளம் பெற்று வருகிறார். இருந்தபோதிலும் ரிஷிசுனக்-அக்‌ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு சரிந்து இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

The post இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் சொத்து ரூ.2000 கோடி சரிவு appeared first on Dinakaran.

Tags : Rishikesh ,London ,Rishisunak-Akshadha Murthy ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...