×

கியா சோனட் ஏராக்ஸ்

கியா நிறுவனம், சோனட் ஏராக்ஸ் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. சோனட் எச்டிஎச் -ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கார், எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது. துவக்க விலையாக 1.0டி ஐஎம்டி (இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) சுமார் ரூ.11.85 லட்சம் எனவும், அதற்கு அடுத்ததாக, 1.0டி டிசிடி (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) சுமார் ரூ.12.39 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ள இன்ஜின் அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை, ஐஎம்டி (இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.12.65 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.13.45 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட மாடலாக தோற்றத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post கியா சோனட் ஏராக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Kia ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...