×

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டோக்கியோ: ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பிரதமர் மோடி சென்றடைந்தார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளின் (ஜி-7) உச்ச மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்கண்ட 7 நாடுகள் இல்லாது, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென் கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதை ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிற தலைவர்கள், அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா பகுதிக்கு சென்று நினைவஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் ஜப்பான் பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பயணித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தில், ஜி-7 மாநாட்டை முடித்துக் கொண்டு பப்புவா நியூகினியாவில் நடைபெறும் இந்தோ-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

The post ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Japan ,G-7 ,Tokyo ,Canada ,France ,Germany ,Italy ,G-7 summit ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...