×

குஜராத் பாஜக மாஜி அமைச்சர் விபத்தில் பலி

அம்ரேலி: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் சவர்குண்ட்லா நகரை நோக்கி காரில், பாஜகவை சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வல்லபாய் வகாசியா (69) சென்றார். அந்த காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது வந்தா என்ற இடத்தில் கார் சென்ற போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த புல்டோசர் மீது மோதியதில் வல்லபாய் வகாசியா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சவர்குண்ட்லாவுக்கு காரில் வந்தபோது, வந்தா கிராமத்திற்கு அருகிலுள்ள மாநில நெடுஞ்சாலையில் வல்லபாய் வகாசியாவின் கார் விபத்தில் சிக்கியது.

சம்பவ இடத்திலேயே வல்லபாய் வகாசியா பலியானார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். கடந்த 2012 சட்டமன்றத் தேர்தலில் சவர்குண்ட்லா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட வல்லபாய் வகாசியா, 2016ல் வேளாண் அமைச்சராக பதவியில் இருந்தார். இவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post குஜராத் பாஜக மாஜி அமைச்சர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Bajaka ,Minister ,Amreli ,Amreli district ,Savarkundla ,Bajaka Maji ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...