×

கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து; தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது பக்தர்களின் கூட்டம் ஜூலை மாதம் இறுதி வரை நீடிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடு வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 66,820 பேர் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிறைந்து காணப்படுவதால், திருமலை புறவழி சுற்றிச்சாலையில் அமைக்கப்பட்ட நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. திருப்பதி சீலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரம், திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருகிற ஜூன் 15-ம் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் செயல்அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

The post கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து; தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati Etemalayan Temple ,Devasthanam ,Thirumalai ,Tirupati ,Ethumalayan ,Temple ,
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது