×

சார் தாம் யாத்திரையின் போது 27 நாளில் 58 பேர் மாரடைப்பால் மரணம்: கேதார்நாத் அதிகாரிகள் தகவல்

டேராடூன்: சார் தாம் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் கடந்த 27 நாட்களில் 58 பக்தர்கள் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் 10,000 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோயில்களில் சென்று வழிபாடு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்தாண்டு நடந்த சார் தாம் யாத்திரையில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை ெவளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, ‘சார் தாம் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள், தங்களது உடல்நலம் குறித்த எழுத்துப் பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களில் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 2,400 பேர், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தாங்களே பொறுப்பு என்று எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளித்துவிட்டு யாத்திரை மேற்கொண்டனர். அவ்வாறு சென்றவர்களில் சிலர் நாள்பட்ட நுரையீரல் சுவாச பிரச்னையால் அவதிக்குள்ளாகினர்.

சுமார் 7,000 பக்தர்களுக்கு அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கையடக்க ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன’ என்றார். இதுகுறித்து மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 27 நாட்களில் 58 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கேதார்நாத்தின் மலையேற்ற பாதை அல்லது ஓட்டல்களில் இவர்கள் இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தைச் சேர்ந்தவர்கள்’ என்றார்.

The post சார் தாம் யாத்திரையின் போது 27 நாளில் 58 பேர் மாரடைப்பால் மரணம்: கேதார்நாத் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sar Tham pilgrimage ,Kedarnath ,Dehradun ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...