×

பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

பிஜி: பசிபிக் பிராந்தியத்தில் பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 38 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே தெற்கு பசிபிக் பகுதியில் 26 இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுனாமி அச்சுறுத்தல் பெரும்பாலும் கடந்துவிட்டதாகக் கூறியுள்ளது.வனுவாட்டு வானிலை ஆய்வு மற்றும் புவி-அபாயங்கள் துறையின் இணையதளத்தின்படி, மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்ட எச்சரிக்கையை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

The post பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Fiji ,New Galadonia ,Tsunami ,Meteorological ,New Caladonia ,Pacific region ,Richtor ,
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...