×

காங். தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதாக தகவல்..!!

பெங்களூரு: காங். தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முதல்வர், துணை முதல்வர் தேர்வான நிலையில் அமைச்சர்களை தேர்வு செய்ய மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லக் ஷமன் சவடிக்கு அமைச்சரவையில் இடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் பொறுப்பை சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post காங். தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : President ,Karke ,Priyank Karke ,Karnataka Cabinet ,Bangalore ,Karnataka ,Kong ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...