×

சென்னை தலைமைச்செயலகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து புதிய காவல் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய காவல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவ.27-ம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 226 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி, தமிழகம் முழுவதும் 21 மையங்களில் நேற்று உடல்திறன் தகுதி தேர்வு தொடங்கியது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கட்-ஆஃப் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 18 ஆயிரத்து 672 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 158 இளைஞர்கள், 3 ஆயிரத்து 514 இளம் பெண்கள் அடங்குவர். இவர்களில், 8 பேர் கர்ப்பிணியாக உள்ளனர்.

உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்று பதவியை அடைந்த தேர்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்.

 

The post சென்னை தலைமைச்செயலகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Secretariat ,CHENNAI ,Secretariat ,Chennai Chief ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்