×

கடந்த 10 மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மீண்டும் வருகை

சென்னை: கடந்த 10 மாதங்களுக்கு முன் பப்ஜி விளையாட்டை தடை செய்தது ஒன்றிய அரசு, இந்த நிலையில் இந்தியாவில் பப்ஜி மீண்டும் வருகின்றது. கிராப்டன் என்ற தென்கொரிய நிறுவனம் சோதனை அடிப்படையிலான அனுமதியை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3 மாதங்களுக்கு சோதனை அடிப்படியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுளள்து.

பப்ஜி விளையாட்டு பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் பப்ஜி இந்தியாவில் மீண்டும் செயல்பட்டை துவங்கருக்கிறது, நாம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் பப்ஜி விளையாட்டு செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டன, அந்த வகையில் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி என்று சொல்லப்படுகின்ற விளையாடும் மற்றும் அந்த செயலியும் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த பப்ஜி விளையாட்டை நடத்தக்கூடிய நிறுவனம் கிராப்டன் என்கின்ற இந்த விளையாட்டு நிறுவனம் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் அது தன்னுடைய விவரங்களை சீனாவுடன் பகிர்ந்து கொண்டிருந்த காரணத்தினால் அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது பிஜிஎம்ஐ என்று அழைக்கப்படுகின்ற பப்ஜி விளையாட்டை இந்தியாவில் மீண்டும் கொண்டுவருவதற்கு தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கிராப்டன் நிறுவனம் அதிகாரபூர்வகமா தெரிவித்துள்ளது.

சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு இந்த அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3 மாத காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்படும், அதற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதே போல மற்ற விவரங்கள் இதை அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்படும் எனவும் அதற்கு நிரந்தரமாக அனுமதி அளிப்பதற்கு தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் விரைவில் பப்ஜி பதிவிறக்கம் செய்யபப்டும் என்று கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

The post கடந்த 10 மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மீண்டும் வருகை appeared first on Dinakaran.

Tags : Pubg ,Chennai ,Union Government ,Pubji ,India ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...