×

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் ஒப்பனை அறையுடன் கூடிய கழிவறைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்..!!

சென்னை: சென்னையில் போதுமான அளவிற்கு பொது கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ஒப்பனை அறை கழிவறைகளை அமைத்து வருகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள பல கழிவறைகள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடைப்பதால் அவற்றையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும் அன்றாட பிழைப்பிற்கு ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் சில இடங்களில் அவசரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட போதிய கழிப்பிடம் இல்லாமலும், இருக்கும் கழிவரைகளும் முகத்தை சுழிக்கும் வகையில் இருப்பதையும் காண முடிகிறது.

உதாரணமாக தினந்தோறும் 100 கணக்கான பேருந்துகளும், ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்லும் பிராட்வே, திருவான்மியூர் போன்ற நகரின் பல்வேறு பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகள் பழுதடைந்தும். உரிய முறையில் பராமரிக்க படாமலும் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி முழுக்க 900க்கும் மேற்பட்ட கட்டணமில்லா கழிவறைகள் இருந்தாலும் அவை முறையாக பயன்பாட்டில் உள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதே போல் கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட பையோ கழிப்பறைகளும் நிரந்தர கட்டுமானம் தண்ணீர் வசதி போன்றவை இல்லாமல் வீணாகி விட்டன. இந்த நிலையில் தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் ஒப்பனை முறைகளுடன் புதிய கழிவறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பைவிட மேம்படுத்தப்பட்ட ஒப்பனை அரை கழிப்பறைகளில் பெண்களுக்கென தனியாக நாப்கின் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

The post தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் ஒப்பனை அறையுடன் கூடிய கழிவறைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Corporation ,Chennai ,Chennai Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...