×

இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து

 

ஆண்டிபட்டி, மே 19: ஆண்டிபட்டி நகரில் வேலப்பர் கோவில் சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. நேற்று மதியம் கடையின் உரிமையால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் பூட்டியிருந்த கடையின் உள்ளே இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.ஆண்டிபட்டியில் பழைய இரும்புக்கடை தீப்பற்றி எரிந்து கரும்புகை குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.

The post இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Kumar ,Velapar ,
× RELATED ஆண்டிபட்டி அருகே அழகுமிளிர...