×

கார், டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்

 

போடி, மே 19: கேரளா மாநிலம் ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் மன்மதநாயர் மகன் அஜித் (32). இவர் தனது மனைவியுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அதன்பின் மூணாறு செல்வதற்கு போடி வழியாக போடிமெட்டு சாலையில் ெசன்று கொண்டிருந்தார். புலியூத்து கருப்பசாமி கோயில் அருகே வந்தபோது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தெக்கூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பிரவீன்குமார் (17) ஓட்டி வந்த டூவீலர் கார் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட பிரவின்குமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

The post கார், டூவீலர் மோதி ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Manmadanayar ,Ajith ,Haripad, Alappuzha, Kerala ,
× RELATED போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி...