×

10, 12ம் வகுப்பில் மௌண்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, மே 19: மௌண்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 12ம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 4 இடங்களையும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 6 இடங்களையும் பெற்று அரிய சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் எஸ்.சூரியநிரஞ்சன், 500க்கு 475 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவர் ஆர்.சாலைபொழில் 500க்கு 470 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி கே.பவித்ராபானு 500க்கு 467 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 3ம் இடத்தையும், மாணவன் முகமது ரித்வான் 500க்கு 465 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 4ம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் என்.ராம் 500க்கு 486 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடத்தையும், மாணவன் எம்.சூர்யா ராமநாதன், மாணவி டி.ஸ்ரீநிதி ஆகிய இருவரும் 500க்கு 485 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவி ஏ.ஜே.ஜோஸ்னா, மாணவன் ஏ.மைத்ரேயன், மாணவன் எம்.இளமுகில் மாணவன் டீ. சந்தோஷ் ஆகிய நால்வரும் 500க்கு 484 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். மாணவி ஏ.டெலன் மரியா 500க்கு 481 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 4ம் இடத்தையும், மாணவன் எஸ்.கவின் குமார் 500க்கு 478 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஏ.கெவின் பிரகாஷ் மற்றும் கே.எம்.வேதவியாஷினி ஆகியோர் 500க்கு 477 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் 6ம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதில் மாணவர்கள் என்.ராம், எம்.இளமுகில், டீ.சந்தோஷ் ,மாணவி ஏ.ஜே.ஜோஸ்னா ஆகிய நால்வரும் கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், மாணவன் ஏ.கெவின் பிரகாஷ் சமூகஅறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் திருமதி.ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜாகுமாரி, மேல்நிலைப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்களின் வழிகாட்டி திரு.சுரேஸ்கண்ணா ஆகியோர் பாராட்டி, இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.

The post 10, 12ம் வகுப்பில் மௌண்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mount Zion CBSE School ,Sivagangai ,Mount Sion CBSE School ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்