×

தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தண்டையார்பேட்டை, மே 19: சவுகார்பேட்டையில் தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாரிமுனை, சவுகார்பேட்டை, பூக்கடை ஆகிய பகுதிகளில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி 5வது மண்டல நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இஸ்மாயில், சிவபாலன், கவுசிக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் சவுகார்பேட்டை வரதப்ப தெருவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சௌதாராம் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட கேரி பேக், டீ‌ கப், பிளாஸ்டிக் கப், பிரியாணி பேப்பர் உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர் அவருக்குச் சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது 5 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவருக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Saukarpet ,Barimuna ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...