×

பிள்ளையன்மனையில் தூய பரமேறுதலின் ஆலய அசன திருவிழா

நாசரேத், மே 19: தென்னிந்திய திருச்சபை – தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 124வது பிரதிஷ்டை விழா கடந்த 14ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 18ம் தேதி அதிகாலை 3மணிக்கு பிரதிஷ்டை மற்றும் பரி.திருவிருந்து ஆராதனை நடந்தது. ஆராதனையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் குருவானவர் ஜேஸ்பர் அற்புதராஜ் அருட்செய்தி கொடுத்தார். அன்று மாலை 4மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு ஆல்வின் இரஞ்சித் குமார் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். இன்று காலை 9மணிக்கு அறுப்பின் பண்டிகை ஆராதனை, ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை மற்றும் பரி .திருவிருந்து ஆராதனை நடக்கிறது. திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க செயலர் ராபின்சன் அருட்செய்தி கொடுக்கிறார். மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டியும், இரவு 7.30மணிக்கு ஐஎம்எஸ் சார்பில் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை (20ம் தேதி) காலை 9.30மணி முதல் பிற்பகல் 2மணி வரை வாலிப ஆண்கள் மற்றும் பெண்கள் பண்டிகை நடக்கிறது. மாலை 7மணிக்கு பரி.திருவிருந்து ஆராதனை நடக்கிறது. திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்க இயக்குனர் ஜோசப் ஜேசன் தர்மராஜ் அருட்செய்தி கொடுக்கிறார். இரவு 9மணிக்கு வாலிபர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9மணிக்கு பாடகர் ஞாயிறு ஆராதனை நடக்கிறது. ஓய்வு பெற்ற குருவானவர் ஜாண் இர்வின் சார்லஸ் அருட் செய்தி கொடுக்கிறார். அன்று இரவு 7.30மணிக்கு ஆலய வளாகத்தில் ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் நடக்கிறது. ஒரிசா கல்வாரி சுவிசேஷ ஊழியத்தைச்சேர்ந்த ஆசீர் ஞானராஜ் செய்தி கொடுக்கிறார். ஏற்பாடுகளை பிள்ளையன்மனை சேகரத்தலைவர் ஆல்வின் இரஞ்சித்குமார், ஆலய அசன கமிட்டி தலைவர் ராபின்சன், உப தலைவர் ஞானையா, செயலாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் பொன் செல்வன், பொருளாளர் கோல்டன்பிரபு, இணை பொருளாளர் ஜோஷ்வாசாமுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் திலகர், ஷம்மா, சேகர செயலாளர் அதிசயம், பொருளாளர் ஆபிரகாம் பாஸ்கரன், சபை ஊழியர் டென்சிங் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்துள்ளனர்.

The post பிள்ளையன்மனையில் தூய பரமேறுதலின் ஆலய அசன திருவிழா appeared first on Dinakaran.

Tags : Church of Pure Sramming ,Festival of Asana ,Nazareth ,Church ,of ,South India ,Thoothukudi- Nazareth ,Thirumandalam ,124th Church of the Pure Scripture of Pure Scripture ,Eradication ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்