×

நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் மேலப்பாளையத்தில் திமுக 2ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

நெல்லை, மே 19: நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மேலப்பாளையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர துணைச்செயலாளர் அப்துல் கையூம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் தொப்பி காஜா வரவேற்றார். தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், நெல்லை ரவி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி, பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை, மாநகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதி அலி, மாநகர பிரதிநிதி பிரான்சிஸ், நத்தம் கந்தன், வட்ட செயலாளர் பத்மராஜ், பகுதி துணை செயலாளர் மைதீன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், கேபிள் ரவி, குரு ஜெசி, முத்துசாமி, கருப்பசாமி, சூப்பர் மணி, ரகுமான்ஷா, சித்திக், இளைஞரணி கண்ணையா, அருள்ராஜ், அலி பக்ருதீன், சேக் மைதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அலிப் மீரான் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் செய்திருந்தார்.

The post நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் மேலப்பாளையத்தில் திமுக 2ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK 2nd year achievement street campaign ,Melapalayam ,Nellai city DMK ,Nellai ,DMK ,2nd year achievement street campaign ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை