×

வேளாண்மை இயக்குநர் ஆய்வு

 

குஜிலியம்பாறை, மே 19: குஜிலியம்பாறை வட்டாரத்தில் 2023 – 24ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆர்.வெள்ளோடு கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசுநிலத் தொகுப்பை வேளாண்மை இயக்குனர் சமிதி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 5 ஆண்டு காலமாக இருந்த தரிசு நிலத்தை ஆர்.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கோடை உழவு செய்து குஜிலியம்பாறை வேளாண்மைத் துறையின் அறிவுறுத்தலின் படி சாகுபடி நிலமாக தயார் செய்து, மா மற்றும் தென்னங்கன்றுகளை நடவு செய்து, பாதுகாத்து வருகிறார். இதனை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர் சமிதி விவசாயியை பாராட்டியதுடன், அப்பகுதி விவசாயிகளிடம் வேளாண்துறையின் திட்டங்கள் அவற்றில் கிடைக்கும் மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

The post வேளாண்மை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Dinakaran ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு