×

கலெக்டர் தகவல் குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது 31 மதுபாட்டில்கள் பறிமுதல்

குளித்தலை மே 19: குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 31 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைபுதூர் புதுப்பாளையம், மேல குட்டப்பட்டி, வாலாந்தூர் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் மது விற்ற கரிகாலன் (50), புதுப்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற வீரமலை (57), புதுப்பாளையம் எம்ஜிஆர் சிலை அருகே மது விற்ற இளங்கோவன் (50), மேலகுட்டப்பட்டி வாய்க்கால் கரையில் மதுவிற்ற ராமன் (52) மற்றும் வாளாந்துரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற செந்தில்குமார் (52) ஆகிய 5 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

The post கலெக்டர் தகவல் குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது 31 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Khuthalai ,Kulithalai ,Dinakaran ,
× RELATED குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் உலக...