×

வரகுபாடி அரசு பள்ளியில்

பாடாலூர், மே 19: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வழியில் மாற்ற கோடை கொண்டாட்டமாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன்படி, வரகுபாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணை தலைமையாசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மந்திரமா? தந்திரமா? கணிதம் சார்ந்த விளையாட்டு, எளிய அறிவியல் சோதனைகள், கதை – கற்பனை விளையாட்டுகள் ஆகிய தலைப்புகளில் தண்ணீரில் குண்டூசி மிதத்தல், பிறந்தநாள் தேதி கண்டுபிடித்தல், புள்ளி வைத்து வரைதல் விளையாட்டு, பலூனை நேராக நிற்க வைத்தல், நூலின் மூலம் ஒலிப் பரிமாற்றம், கதை சொல்லி முடித்து வைத்தல், நமக்குத் தெரிந்த இடங்களைப் படம் மூலம் வரைதல், செய்தித்தாள்களை கொண்டு விதவிதமான தொப்பிகளை செய்தல், கைரேகை மூலம் படம் உருவாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல பணியாளர் சசிகலா, கல்வியாளர் செல்வம் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருத்தாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ரம்யா, மேனகா, முத்தமிழ் செல்வி ஆகியோர் செயல்பட்டனர்.

The post வரகுபாடி அரசு பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : Varagubadi Government School ,Badalur ,millennial ,Varakabadi Government School ,
× RELATED டி.களத்தூர் அரசு பள்ளியில் வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை