×

விராலிமலையில் அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிளஸ்2 மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து

விராலிமலை, மே 19: புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம்தேதி வரை நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10ம்தேதி முதல் 21-ம் தேதி வரை நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கடந்த மே 8ம் தேதி வெளியிட்டார். இதில் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியான விராலிமலை அருகேயுள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் மகள் சரண்யா வரலாறு-100,கணக்குபதிவியல்-100,வணிகவியல்-100, பொருளியல் -100, தமிழ்-99,ஆங்கிலம்-92 என 600 க்கு 591 மதிப்பெண் பெற்று பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றார். இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை அவரது அலுவலகத்தில் மாணவி சரண்யா சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவியுடன் திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன், மாணவியின் தந்தை நாகராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post விராலிமலையில் அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிளஸ்2 மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Kavitha Ramu ,Pudukottai ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி