×

ஊராட்சி செயலர்கள் தொடர் போராட்டம்

 

உடுமலை, மே 19: ஊரக வளர்ச்சி துறையின் கீழ் ஊராட்சிகளை நிர்வகிக்க செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கருவூலம் வாயிலாக நேரடியாக ஊதியம் வழங்குவது, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றியத்துக்குள் பணியிட மாற்றம், பணி விதிமுறை மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர்.உடுமலை ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளில் உள்ள செயலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரிவசூல், குடிநீர் திட்ட பணிகள், குழாய் இணைப்பு அனுமதி ஆய்வு உள்ளிட்ட பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post ஊராட்சி செயலர்கள் தொடர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Department of Rural Development ,Panchayat ,Dinakaran ,
× RELATED உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர் கூட்டம்