×

கோபி அருகே கார் கவிழ்ந்து விபத்து தம்பதி உயிர் தப்பினர்

 

கோபி,மே19: கோபி அருகே உள்ள தாசம்பாளையத்தில் தலை கீழாக கார் கவிழ்ந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் குமார்(42). விவசாயி. இவர் தனது மனைவி பாரதி(34), மகன் வசந்தகுமார்(10) ஆகியோருடன் கரூர் அருகே கணபதிபாளையத்தில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். நேற்று மதியம் சாமி தரிசனம் முடிந்த பிறகு மூன்று பேரும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.காரை குமார் ஓட்டிச் சென்றார்.

கார் கோபி அருகே உள்ள தாசம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்ட போது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காரின் கதவுகளை திறந்து காருக்குள் லேசான காயத்துடன் இருந்த குமார், அவரது மனைவி பாரதி, மகன் வசந்தகுமார் ஆகியோரை மீட்டனர். காயமடைந்த மூன்று பேரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினா். விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோபி அருகே கார் கவிழ்ந்து விபத்து தம்பதி உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Gobi Gobi ,Dasampalayam ,Gobi ,Karnataka State ,Dinakaran ,
× RELATED மின்சார வேலியில் சிக்கி யானை பலி