×

எல்ஐசி பங்கு மதிப்பு சரிவுக்கு அதானி மோசடியே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்ஐசி பங்குகளின் வீழ்ச்சிக்கு அதானி மோசடியே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு மதிப்பு நேற்று 35% சரிவை சந்தித்தது. எல்ஐசி பங்கு மதிப்பு வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “சரியாக ஓராண்டுக்கு முன் இந்திய பங்குச் சந்தைகளில் எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டன.

அப்போது பங்குச் சந்தைகளில் அதன் மொத்த மதிப்பு 5.48 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது 3.59 லட்சமாக குறைந்துள்ளது. பங்கு மதிப்பு 35 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதனால் எல்ஐசியில் காப்பீடு செய்துள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதானி குழும மோசடியே இதற்கு காரணம். ஆனால் ஒன்றிய மோடி அரசு இதனை மூடி மறைக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே அதானி மோசடி, மோடிக்குமான தொடர்பு பற்றிய முழு உண்மைகளை வௌிப்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

The post எல்ஐசி பங்கு மதிப்பு சரிவுக்கு அதானி மோசடியே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Adani ,Congress ,New Delhi ,LIC ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...