×

வெளிநாட்டு எண்ணில் இருந்து காஷ்மீர் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்க அழைப்பு: போலீசார் எச்சரிக்கை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் அழைப்பிற்கு மக்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜம்முவில் +44 7520 693559, +44 7418 343648 மற்றும் +44 7520 693134 ஆகிய வெளிநாட்டு எண்களில் இருந்து அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் செய்திகளுக்கு மக்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த எண்களின் மூலம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருக்கும் ஜி-20 மாநாட்டை பற்றி தவறான தேசத் துரோகத் தகவல் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த குறுஞ்செய்தியில், “ஜி-20 தூதர்களே காஷ்மீர் இந்தியா அல்ல. மோடி ஆட்சி மோசமாக உள்ளது. ஸ்ரீநகரில் நடைபெறும் மாநாட்டை ஜி-20 உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை காப்பாற்றுங்கள்,” என்று கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளிநாட்டு எண்ணில் இருந்து காஷ்மீர் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்க அழைப்பு: போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kashmir G-20 conference ,Jammu ,Kashmir ,G-20 conference ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...