×

நிலமோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி விசாரணைக்கு ஆஜர்

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக குறைந்த விலையில் இடங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது வாக்கு மூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

The post நிலமோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Rabri Devi ,New Delhi ,Former ,Delhi Enforcement Department ,Ajar ,Chief Minister Rabri Devi ,
× RELATED லாலு மகள் ரோகினி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்