×

அரியானா பாஜ எம்பி ரத்தன் லால் கட்டாரியா மறைவு

சண்டிகர்: அரியானாவை சேர்ந்த பாஜ எம்பி ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அரியானாவின் அம்பாலா மக்களவை தொகுதி எம்பியான ரத்தன் லால் கட்டாரியா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமானது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

எம்பி ரத்தன் லால் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் முதல்வர் மனோகர் லால் கட்டர், மூத்த பாஜ தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மறைந்த ரத்தன் லால் கட்டாரியா ஜல் சக்தி துறை இணை அமைச்சர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

The post அரியானா பாஜ எம்பி ரத்தன் லால் கட்டாரியா மறைவு appeared first on Dinakaran.

Tags : Ariana Baja ,Ratan Lal Kataria ,Chandigarh ,Baja ,Ariana ,Ambula ,
× RELATED மார்பிங் செய்து வெளியீடு; மல்யுத்த வீராங்கனையின் ஆபாச வீடியோ வைரல்