×

ஜெகதீப் தன்கர், தேவகவுடாவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல ஆரோக்கியத்தோடும், இன்னும் பல ஆண்டுகள் நம் நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவே கவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜெகதீப் தன்கர், தேவகவுடாவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jagadeep Dhankar ,Deve Gowda ,Chennai ,M.K.Stalin ,Vice President ,
× RELATED தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில்...