×

காஸ்மோபாலிடன் கிளப்புக்கு சீல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப் உள்ளது. கிளப் அமைந்துள்ள இடம் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது. இந்த இடத்திற்கு ரூ.87 லட்சம் வாடகை பாக்கி இருந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வாடகை பாக்கியை செலுத்த அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து கிளப் நிர்வாகி ராஜேந்திரன் ரூ.30 லட்சத்தை வங்கியில் செலுத்தினர். இந்நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று கிளப் வளாகத்திற்கு சீல் வைக்க வந்தனர். இதற்கு காஸ்மோபாலிடன் கிளப் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

The post காஸ்மோபாலிடன் கிளப்புக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Seal for Cosmopolitan Club ,Nagapattinam ,Nagapattinam Government Hospital ,Cosmopolitan Club ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...