×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதி போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மான்செஸ்டரில் நடந்து வரும் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் நேற்று மான்செஸ்டர் சிட்டி – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் மான்செஸ்டர் அணி 2 கோல்கள் அடித்தது. பின்னர் 2வது பாதியிலும் 2 கோல்கள் அடித்தது.

ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. 2 அணிகளும் ஏற்கனவே மோதிய அரையிறுதியின் முதலாவது சுற்று போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இரு ஆட்டங்களின் முடிவையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி 5 – 1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இன்டர்மிலன் அணியுடன் மான்செஸ்டர் சிட்டி மோத உள்ளது.

The post சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் மான்செஸ்டர் சிட்டி appeared first on Dinakaran.

Tags : Manchester City ,Champions League Football Final ,Manchester ,Champions League football ,Manchester… ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிப்பு