×

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை அயர்லாந்து வீரர் 7வது இடம்: கோஹ்லி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளினார்

துபாய்: ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 7வது இடம் பிடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த சில போட்டிகளாக அசத்தலாக ஆடி வரும் அயர்லாந்து அணியின் இளம் பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர்(23) இடம் பிடித்துள்ளார்.

இவர் 722 புள்ளிகளுடன் 9 இடங்கள் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டெக்டர் அருமையாக விளையாடினார். தொடரின் 2வது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார். இதன்மூலம் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், கோஹ்லி, ரோகித் சர்மாவையும் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

The post ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை அயர்லாந்து வீரர் 7வது இடம்: கோஹ்லி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளினார் appeared first on Dinakaran.

Tags : ICC ,Ireland ,Kohli ,Rohit ,Dubai ,Harry Dector ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...