×

சந்திரயான்-3 ஜூலையில் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ மூத்த விஞ்ஞானி தகவல்

பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை மாதம் 2 வாரத்தில் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி தகவல் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பும் முயற்சி 2019ம் ஆண்டு விண்கலத்துடனான லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சந்திராயன் 3 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை மாதம் 2 வாரத்தில் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள தொழில்நுட்பங்களை பரிசோதிக்கும் பணி, நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஆர்பிட்டரை நிலைநிறுத்தும் முயற்சிக்கான சோதனை மற்றும் நிலவின் பாதையில் லேண்டர், ரோவரை தரையிறக்கும் திறன் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலத்தை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

The post சந்திரயான்-3 ஜூலையில் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ மூத்த விஞ்ஞானி தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...