×

சுட்டெரிக்கும் வெயிலில் காயும் நீர்நிலைகளால் தாகத்தில் தவிக்கும் பறவைகள்: வீடுகளில் உணவு, தண்ணீர் வைப்போம்

கொடைக்கானல்: சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் காய்ந்து வருவதால் ரீங்காரமிட்டபடி தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் மே மாதம் துவங்கியது முதல் அவ்வப்போது கோடை மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் சதம் தாண்டி வெயில் அடிப்பதால் மனிதர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு கூட தள்ளப்படுகின்றன. அறிவியல் உலகத்தில் வாழும் மனிதர்களுக்கே தண்ணீர் இல்லாத நிலை வரும் பொழுது ஐந்தறிவு படைத்த பறவைகளுக்கும் தண்ணீர் தேவை அடிப்படைதான்.

இந்நிலையில் கோடை மழை முடிந்த பிறகு தற்போது கடுமையான வெயில் வாட்டி வருவதால் பெரும்பாலான நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு வருகிறது. இதனால் தண்ணீரைத் தேடி பறவைகளும் சுற்ற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நீர் நிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய காடுகளில் பல்வேறு இனங்களான பறவைகள் இருந்து வருகிறது. இதில் அரிய வகை பறவைகளும் அடங்கும். மற்ற நேரங்களை விட தற்போது இனப்பெருக்க காலமும் இந்த மாதம் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரைத் தேடி ரீங்காரமிட்டு அலைய துவங்கியிருக்கிறது. பறவை இனங்கள். பறவைகளின் தண்ணீர் தேவையை மனிதர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சுற்றி வரக்கூடிய சிட்டுக்குருவிகள், பறவை இனங்களான வெள்ளைக்கண்ணி, புள்ளி புறா, சிவப்பு மீசை சின்னான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தண்ணீர் மற்றும் உணவுகள் இன்றி தவித்து வருகிறது. இதனை போக்குவதற்காக மனிதர்கள் தங்களுடைய வீட்டு மொட்டை மாடிகளில் தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைக்க வேண்டும் என பறவை என ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் வனங்களை விட்டு வெளியே வராத பறவைகளும் இருக்கின்றன. இதற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையால் இயன்ற முயற்சியை செய்ய வேண்டும். எனவும் தண்ணீர் இன்றி உயிரிழக்கக்கூடிய பறவைகள் மற்றும் பறவை இனங்களை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post சுட்டெரிக்கும் வெயிலில் காயும் நீர்நிலைகளால் தாகத்தில் தவிக்கும் பறவைகள்: வீடுகளில் உணவு, தண்ணீர் வைப்போம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்