×

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகனா?.. ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தடியடி நடத்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் உத்தரவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சுட்டிக்காட்டினார். 2017ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராடியதை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் கொடியேற்றுவதற்காக அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக்காரர்கள் மீது போலீசாரை விட்டு தடியடி நடத்த செய்ததாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

தன்னை தானே பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகன் என கூறி கொள்வதாக அவர் விமர்சித்தார். விளம்பரத்திற்காக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என தன்னைத் தானே புகழ்ந்துகொள்கிறார்; ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட பாதுகாப்பு அளித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பன்னீர்செல்வம் அமைச்சரவையில் ஜெயக்குமாறும் இடம்பெற்றிருந்தார். இதனை சுட்டிக்காட்டி போராட்டக்காரர்கள் மீதான தடியடியை தாங்கள் ஏன் தடுக்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெயக்குமார் மழுப்பலாக பதிலளித்து நழுவினார்.

The post போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகனா?.. ஜெயக்குமார் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Jallikattu ,Jayakumar ,Chennai ,Former ,Chief Minister ,Marina ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...