×

ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650 மோட்டார் பைக்கின் விலை உயர்வு..!!

ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650 மோட்டார் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 3 வேரியண்ட்கள் உள்ளன. இந்த மூன்றுக்கும் சுமார் ரூ.6,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வுடன் சேர்த்து துவக்க ஷோரூம் விலையாக, இந்த மோட்டார் சைக்கிளின் ஆஸ்ட்ரால் வேரியண்ட் சுமார் ரூ.3,54,398, இன்டர்ஸ்டெலார் சுமார் ரூ.3,69,622 மற்றும் டாப் வேரியண்டான செலஸ்டியல் சுமார் ரூ.3,84,845 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் 648 சிசி பேரரல் டிவின் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,250ல் 46 பிஎச்பி பவரையும் 5,650 ஆர்பிஎம்-ல் 52.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650 மோட்டார் பைக்கின் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Royal Enfield ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...